தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடல் பகுதியில் அடிக்கடி கடல் நீர் உள்வாங்குவது வாடிக்கையாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் கடற் பகுதியில் நாழிக் கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் கடற்கரை பகுதி வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. 100 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பச்சை நிற கடல் பாசிகள் வெளியே தெரிந்தது. இன்று செவ்வாய்க் கிழமை என்பதால் முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு வந்திருந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் உள்வாங்கிய கடற்பரப்பில் நின்று புகைப்படம் எடுத்தனர்.

Advertisment