புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமக்கொள்ளைக்கு பஞ்சமில்லை. அதிகாரிகள் ஆசீர்வாதத்துடன் தொடர்ந்து மண், மணல், கிராவல் திருட்டுகள் நடந்து கொண்டிருக்கிறது. சமீப காலமாகப் புதுக்கோட்டை கனிவளத்துறை அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கியுள்ள நிலையில் சில வாரங்களில் புதுக்கோட்டை  மாவட்டம் முழுவதும் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, அரிமளம், அறந்தாங்கி உள்படப் பல பகுதிகளிலும் பல வாகனங்களைப் பிடித்துக் காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisment

அதே போல நேற்று அரிமளம் பகுதியில் கிராவல் மண் ஏற்றிய டாரஸ் லாரிகள் ஓடுவதாக கனிமவளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைக்க அரிமளம் பகுதிக்குச் சென்று சோதனை செய்த போது( பதிவு எண் : TN 55 BP 3447) டாரஸ் லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்த போது நிறுத்தி சோதனை செய்த போது லாரி ஓட்டுநரிடம் பர்மிட் இல்லை என்பது தெரியவந்தது. உடனே அந்த லாரியையும் லாரி ஓட்டுநரையும் கனிமவளத்துறை அதிகாரிகள் அரிமளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் கொடுத்துள்ளனர்.

Advertisment

இதே லாரி கடந்த அக்டோபர் 24 ந் தேதி ஆலங்குடி காவல் சரகம் வெண்ணாவல்குடியில் கிராவல் மண் திருடிச் சென்ற போது புதுக்கோட்டைக் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா பிடித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்து லாரி ஓனர் அறந்தாங்கி ரமேஷ்பாபு மனைவி தமிழ்செல்வி மீது புகார் கொடுத்தார். அந்த லாரியை நீதிமன்றம் மூலம் மீட்டு மீண்டும் கிராவல் திருட்டிற்குப் பயன்படுத்தி நேற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளிடம் சிக்கி அரிமளம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.