தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்படும் “திருக்குறள் திருப்பணி” என்ற தொடர் நிகழ்ச்சியின் தொடக்க விழா, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில்இன்று  (10.01.2026) நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் சண்முகையா முன்னிலையில், பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 40 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தமிழ் செம்மல் கா. காளியப்பன், எழுத்தாளர் முத்து பாரதி, திருக்குறள் முத்துகுமாரசாமி ஆகியோர் மாணவர்களுக்கு திருக்குறள் குறித்த சிறப்பு வகுப்புகளை நடத்தினர். இந்த நிகழ்ச்சி ஒரு தொடர் திட்டமாக நடைபெறுகிறது. மொத்தம் 30 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

இதன் மூலம் திருவள்ளுவரின் கருத்துகளையும், திருக்குறளின் வாழ்க்கை வழிகாட்டுதலையும் மாணவர்களின் மனதில் ஆழமாக பதிய வைப்பதற்காக, தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது.