The roar of a leopard - the villagers in shock Photograph: (erode)
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன.
இந்நிலையில் பழைய ஆசனூர் கே.கே. நகர் பகுதியில் பசுவா என்பவரது விவசாயியின் ஆட்டுக்குட்டியை இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கி கொன்றது. கடந்த சில நாட்களுக்கு முன் 2 மாடுகள், வளர்ப்பு நாய், ஆட்டுக்குட்டியை சிறுத்தை தாக்கியது. தற்போது மீண்டும் சிறுத்தை ஆட்டுக்குட்டியை தாக்கிக் கொன்றுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அடிக்கடி கிராமத்திற்குள் வரும் சிறுத்தையை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என ஆசனூர் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow Us