கிருஷ்ணகிரியில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் இருவரும் மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள். இவருடைய மகள் சுசிதா. பள்ளியில் பயின்று பயின்ற சுசிதா காலாண்டு தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள் தாய் எல்லம்மாளையும், சுசிதாவையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி தங்கதுரை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. எல்லம்மாள் அந்த பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்த நிலையில் அது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், மகள் வீடு புகுந்து மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.