'ஓரணியில் தமிழ்நாடு' எனும் மூவ்மெண்ட்டை கடந்த 2-ந் தேதி தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து அனைத்து அமைச்சர்கள் தொடங்கி திமுக நிர்வாகிகள் அனைவரும் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக டோர் டூ டோர் பிரச்சாரத்தில் இறங்கி சேர்த்து வருகின்றனர். ஓரணியில் தமிழ்நாடு எனும் இந்த மூவ்மெண்ட்டில் இதுவரை பல லட்சம் பேர் உறுப்பினராகி இருக்கிறார்கள் என திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை எந்தளவில் இருக்கிறது என்பதை தினமும் ஆய்வு நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

Advertisment

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர்,  ''அரியலூர் பகுதியில் பாமக ஒரு சக்தியாக இருக்கிறது. இப்பொழுது பாமகவில் ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனையின் காரணமாக நமக்கு ஒரு சாதகமான சூழ்நிலை இந்த பகுதியில் நிலவும்'' என்றார்.

மேலும், ''இப்போதெல்லாம் நாளைக்கே முதலமைச்சராகி விடுவது போல நான் உங்களோடு வரவில்லை எங்களோடு வரவில்லை என நடிகர்கள் பேசி வருகின்றனர்'' என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.