மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இத்தகைய சூழலில் தான் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (05.03.2026) இரவு, பல்வேறு மாநிலங்களின் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களை மாற்றி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். எனவே கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா லடாக் துணை நிலை ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். டெல்லி துணை நிலை ஆளுநராக தரஞ்சித் சிங் சந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேச ஆளுநர் சிவ் பிரதாப் சுக்லா தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். லடாக் துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா இமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மற்றொருபுறம் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த அதிரடி மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக, தமிழக அரசுடன் தொடர் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென மாற்றப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேபோன்று, மேற்கு வங்க சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா குறித்த செய்தி எனக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது. அவரது ராஜினமாவிற்கான காரணங்கள் இந் நேரத்தில் எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், தற்போது நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால், வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சில அரசியல் நலன்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து ஆளுநருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமோ என்று நான் ஆச்சரியப்படமாட்டேன் (ஏனெனில் அதுவாக தான் இருக்க வாய்ப்பு உண்டு).
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/06/rn-ravi-smile-1-2026-03-06-08-45-19.jpg)
ஆர்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இப்போதுதான் எனக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக முறையான நடைமுறைகளின்படி அவர் என்னிடம் ஒருபோதும் ஆலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் உணர்வைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதோடு, நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன. மத்திய அரசு கூட்டுறவுக் கூட்டாட்சிக் கோட்பாடுகளை மதிக்க வேண்டும். அத்துடன் ஜனநாயக மரபுகள் மற்றும் மாநிலங்களின் கண்ணியத்தைச் சிதைக்கும் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/mamta-2026-03-06-08-44-38.jpg)