வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டரின் விலை மாதந்தோறும் முதல் தேதியில் விலை அதிகரிப்பு அல்லது குறைவு என மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் வணிக பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டரின் விலை 29.50 ரூபாய் உயர்ந்து 1,929 ரூபாய்க்கு இன்று (01.03.2026) முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 110 ரூபாய் விலை உயர்ந்து 1849.50 ரூபாய்க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 50 ரூபாய் விலை உயர்ந்து 1,899.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 868.50 பைசா என்ற அதே விலையில் தொடர்கிறது.
Follow Us