பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இந்தியா கூட்டணி உறுதியான முடிவெடுத்துள்ளது. அந்தவகையில், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே இருந்த முரண்பாடுகள் களையப்பட்டு, கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லாமல் சுமுகமாக இருந்துவருகிறது. இந்த நிலையில், இந்தியக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காக நேற்று (28.01.2026) டெல்லியில் திமுக எம்.பி கனிமொழி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்தார். 

Advertisment

இந்த சமயத்தில், மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. முன்னதாக மதுரை சுப்ரமணியபுரத்தில் திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட, திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ., கோ. தளபதி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார். 

Advertisment

manickam-tagore-mp-ani-mic

அதாவது, "இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் நமக்கென்ன? ஆகாவிட்டால் நமக்கென்ன? என்ற மனநிலையில் சிலர் பேசுகிறார்கள். இந்தியா கூட்டணியைக் காப்பாற்றி வருவது திமுக தான். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் 3000 முதல் 4000 ஓட்டுகள் தான் இருக்கிறது.  பூத் கமிட்டி கூட அமைக்க முடியக் கட்சி தான் காங்கிரஸ்" எனச் சாடியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் எக்ஸ் பதிவில் "இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் போட்டியிட வேண்டும் எனத் தலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன். தன்மானம் காக்க,  சிலருக்குப் படம் புகட்ட வேண்டும். அதிகாரத்தில் இருப்பதால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்து விட்டது" எனத் தெரிவித்திருந்தார். 

ko-thalapathy-jothimani

இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால், அப்பகுதியில் இரு காட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த அரசியல் மோதலுக்கிடையில், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பல இடங்களில், "மதுரை வடக்கு சட்டமன்ற வாக்காளர்களின் ஓட்டு காங்கிரசின் கை  சின்னத்திற்கே" என்ற வாசகங்களைக் கொண்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இவ்வாறாக  ஒட்டப்பட்ட போஸ்டர்,  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment