“மாநிலங்களின் அரசியல் அதிகாரம் குறையும்” - திமுக எம்.பி.வில்சன் அதிரடி!

wilson

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் ஆற்றிய உரைக்கு மத்திய சட்ட அமைச்சர் தனது கடிதத்தின் மூலம் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய வில்சன்,  "தொகுதி மறுவரையறை, மாநிலங்களை பாதிக்கும் என்பதை ஒப்புக்கொண்டார் சட்ட அமைச்சர். மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்னரே, மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் இடங்களை மறுசீரமைப்பதற்கு தொகுதி மறுவரையறை ஆணையம் உருவாக்கப்படும் என்றும்  அவர் கூறினார்.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் தொகுதி மறுவரையறை ஆணையம் நிறுவப்படும், எனவே அதன் அடிப்படையை அப்போது தான் விவாதிக்க முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில் தொகுதி மறுவரையறையின் விளைவை ஊகிப்பது பொருத்தமானதாக இருக்காது.

ஒன்றிய சட்டத்துறை அமைச்சரின் இந்த பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,  முன்கூட்டியே எழுப்பிய கேள்விகளை ஆதரிக்கிறது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் நடைபெறும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதால், 2026 வரை அரசியலமைப்பில் இடஒதுக்கீட்டில் தற்போதுள்ள நிலை இயற்கையாகவே முடிவுக்கு வரும். இது தொகுதி மறுவரைக்கான சாத்தியத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக, மாநிலங்களின் அரசியல் அதிகாரம் குறையும்" என்று வில்சன் எம்.பி. தெரிவிக்கிறார்

dmk MP wilson
இதையும் படியுங்கள்
Subscribe