தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவானது தமிழக சட்டப்பேரவையில் முறையாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு தற்பொழுது அனுப்பி வைத்துள்ளார். துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.