நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

இந்த கூட்டத்தொடரை கூட்டுவதற்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். ஜனவரி 28ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடரும் இந்த கூட்டத்தொடர், வருகிற ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடையும்.

Advertisment

குடியரசுத் தலைவரின் உரை, மத்திய பட்ஜெட் அறிவிப்பு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் என பிப்ரவரி 13ஆம் தேதி வரை முதல் அமர்வு நடைபெற்று நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும். அதன் பின்னர், இரண்டாவது அமர்வாக மார்ச் 9ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடி ஏப்ரல் 2ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், மத்திய பட்ஜெட்டில் இம்மாநிலங்களுக்கு கவரும் அறிவிப்புகள் வெளியாகுமா என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisment