The Lok Sabha winter session of Parliament concludes today
இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளில் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு சிறப்பு விவாதம், எஸ்.ஐ.ஆர், உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. இதற்கிடையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை விபி-ஜி ராம் ஜி உள்ளிட்ட மசோதாக்களும் மீறி நிறைவேற்றப்பட்டது.
கடந்த 18 நாட்களாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்களிடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு இன்று (19-12-25) நிறைவிடைந்துள்ளது. அடுத்த கூட்டத்தொடர் எப்போது தொடரும் என்பதை தேதி குறிப்பிடாமல் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.வந்தே மாதரம் பாடலும் குளிர்கால கூட்டத்தொடரின் மக்களவை அமர்வு இன்று நிறைவுபெற்றுள்ளது.
Follow Us