பெங்களூருவில் ஸ்கூட்டர் மீது பள்ளி பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisment

பெங்களூருவில் இன்று (11/02/2026)  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மீது பள்ளிப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். வடக்கு பெங்களூருவின் ஹென்னூர் பகுதியில் உள்ள தன்சந்திரா அருகே இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது.

Advertisment

பெங்களூர் நகர ஆயுதப்படைப் படையில் (CAR) கான்ஸ்டபிளாக பணிபுரியும் நாகன கவுடா, தனது 2 வயது மகள் வர்ஷா மற்றும் 4 வயது பானுவுடன் பால் வாங்க ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, ​​பேருந்து ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிரே வந்த ஒரு பள்ளிப் பேருந்து ஒன்று திருப்பத்தில் வந்தபோது ஸ்கூட்டரில் மோதியதில், குழந்தைகள் இருவரும் சாலையில் விழுந்தனர்.

இதில் பேருந்தின் பின் சக்கரம் குழந்தைகள் மீது ஏறி, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஸ்கூட்டரை இயக்கிய நாகனகவுடாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரைக் கைது செய்து, ஹென்னூர் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.