"The leader is the one who stands on the field; one should not just wear a mask" - Karunas's obsession Photograph: (karunas)
கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மகாபலிபுரத்திற்கு வரவழைத்து இன்று (27-10-25) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Advertisment
இந்நிலையில் சிவகங்கையில் நடிகர் கருணாஸிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சினிமாவில் நடித்தால் முதல்வராகி விடுவார்கள் என்றால் அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. எம்ஜிஆர் சினிமாவில் தான் நடித்தார். அரசியலுக்கு வந்தார் முதலமைச்சராக இருந்தார். அதேபோல ஜெயலலிதாவும் சினிமாவில் நடிகையாக இருந்து புகழ் பெற்று அதன் பிறகு அதிமுகவின் கட்சியில் செயல்பாடுகளை செலுத்தி அதன் பிறகு முதலமைச்சராக இருந்திருக்கிறார். சினிமா துறையில் மட்டுமல்ல எந்த துறையில் இருந்து யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இதுதான் அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி. ஆனால் இந்திய குடிமகனாக இருக்கக்கூடிய எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. அது இல்லை என்று சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் உரிமை கிடையாது.
Advertisment
ஆனால் இப்பொழுது வந்திருக்கக்கூடிய விஜய்யின் செயல்பாடுகள், அவருடைய அரசியல் செயல்பாடுகள் என்ன? மக்களுடைய பிரச்சனைகளை எப்படி கையாளுகிறார். குறிப்பாக கரூரில் 41 பேர் அப்பாவி மக்கள் இறந்த பொழுது அவருடைய செயல்பாடுகள் எப்படி இருந்தது என்று பார்த்து தான் இன்று பலபேர் பல விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.
அரசியல் என்பது மக்களுக்கானது. மக்களால் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர்கள் தான் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அந்த அதிகாரம் யாருக்கானது என்றால் மக்களுக்கானது. மக்களுக்காக முதலமைச்சராக, அமைச்சராக வரக்கூடிய ஒருவர் மக்களுக்கு பிரச்சனை என்கிற பொழுது ஓடி ஒளிவதை ஏற்றுக் கொள்ள முடியுமா? அந்த அடிப்படையில் மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதியற்றவர்கள்.
இதைவிட பெரிய கூட்டத்தை எல்லாம் கையாண்டவர் விஜயகாந்த். சிவாஜி கணேசன் மரணத்திற்கு இறுதி மரியாதை செலுத்தும் பொழுது எவ்வளவு பெரிய கூட்டங்கள். அந்த இடத்தில் அதை எப்படிக் கையாண்டார். இதை விடப் பெரிய மாநாடுகளை நடத்தியவர் விஜயகாந்த். சும்மா ஏதோ சப்பக் கட்டு கட்ட கூடாது. தலைவனாக இருந்தால் பிரச்சனை ஏற்பட்டால் களத்தில் இறங்கி நிற்பவன் தான் தலைவன். சினிமாவில் நூறு பேர் கூட சண்டை போடுபவர் நேரிலும் இறங்கி சண்டை செய்யணும்'' என்றார்.
Follow Us