The kind face that turned a small drop into a flood Photograph: (dmk)
கடலூரை சேர்ந்த சிறுமி உள்ளிட்ட கல்விக்காக சிறு துளி தொகையை அளித்து துவக்கியது, இன்று பெருவெள்ளமாக ரூ 1000 கோடியாக மாறி உள்ளதாக முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவு செய்தது கல்விக்காக நிதி அளித்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் கடலூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் ரூ 2 ஆயிரம் கோடி தருவோம் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு முதல்வர் பதிலளித்துப் பேசுகையில் மும்மொழிக்கொள்கை, குலக்கல்வி உள்ளிட்டவைகளை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ரூ10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாட்டை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என தெரிவித்தார்.
இதை டிவியில் நேரலையில் பார்த்த கடலூரைச் சேர்ந்த நுரையீரல் மருத்துவர் கலைக்கோவன்-மருத்துவர் கிருஷ்ணபிரியா தம்பதியின் மகள் நன்முகை(4) எல்கேஜி படிக்கும் இவர் அவரது சேமிப்பில் வைத்திருந்த ரூ 10 ஆயிரத்தை ஒன்றிய அரசு தரவில்லை என்றால் என்ன நான் தருகிறேன் என ரூ 10 ஆயிரத்தை பெற்றோர்கள் உதவியுடன் காசோலையாக முதல்வருக்கு அனுப்பினார்.
பிறகு சிறுமி கல்வி நிதி கொடுத்தது குறித்து வீடியோவில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த முதல்வர் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க நிகழ்ச்சியில் நன்முகை சிறுமி பேசியதையும் கல்வி நிதி அளித்தது குறித்தை குறிப்பிட்டுப் பேசினார். அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவர் சிறுமிகள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளி என நிதி அளித்துள்ளார்கள்.
இந்த நிதி கடந்த 10 மாதங்களில் ரூ 1000 கோடி சேர்ந்துள்ளது. இது குறித்து முதல்வர் எக்ஸ் தள பதிவில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளிக்கு நிதி கொடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார். அன்று கடலூர் சிறுமி நன்முகை அளித்த சிறுதுளி இன்று பெரு வெள்ளமாக மாறியுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் கல்விக்காக உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
Follow Us