திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தாழவேடு இருளர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள் அவர்கள் இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நள்ளிரவில் கஞ்சா போதையில் கையில் கத்தி மற்றும் இரும்பு கம்பிகளை எடுத்து வந்து இந்த பகுதி மக்களை வீடுகளை அடித்து நொறுக்கி வாகனங்களை அடித்து நொறுக்கி ராமசாமி என்பவரை கத்தியால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு கஞ்சா போதை கும்பல் தப்பி சென்றது. 

Advertisment

இந்த சம்பவத்தில் கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த ராமசாமி என்ற முதியவர் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் உள்ளார். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு தொடர்புடைய கஞ்சா போதை இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கஞ்சா போதை இளைஞர்களை வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் வந்த வாகனங்களை அடையாளம் கண்டு அதன் மூலமாக திருத்தணி போலீசார் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் மற்றும் இதில் தொடர்புடைய 17 வயது சிறுவர்கள் மொத்தம் மூன்று பேர் மற்றும் முருகம்பட்டு  காலனி சார்ந்த சரவணன், கடந்த தேர்தலில் திருத்தணி அமிர்தாபுரம் சார்ந்த கார்த்திக் ஆகிய இருவரையும் உள்பட ஐந்து பேரை திருத்தணி போலீசார் கைது செய்துள்ளனர். 

Advertisment

இதில் தொடர்புடைய மற்றொரு நபர் நாகராஜ் என்பவர் போலீசார் தேடுதலுக்கு பயந்து வழக்கு பயந்து தப்பி ஓடி தலை மறைவாகியுள்ளார் போலீசார் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். கஞ்சா போதையில் கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபட்ட அரசு பள்ளி மாணவன் 17 வயது சிறுவர்கள் மொத்தம் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 17 வயது சிறுவர்கள் மூன்று பேரை சிறார் நீதிமன்றத்திற்கும் சிறார் சீர்நோக்கு இல்லம் செங்கல்பட்டு ஆகியவற்றுக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சரவணன் மற்றும் கார்த்தி ஆகியோர்களை திருத்தணி நீதிபதி முன்பும் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்துள்ளனர். 

சமீப காலங்களில் திருத்தணியில் கஞ்சா போதையில் 17 வயது சிறுவர்கள் சிக்குவதும் கொலை வெறி தாக்குதல்களை பொதுமக்களை தாக்குவதும் சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு தகுந்த நடவடிக்கையை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் முன் வந்து எடுக்கவில்லை என்று தடுப்பதற்கான நடவடிக்கை எந்த ஒரு நடவடிக்கையும் ஈடுபடவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்

Advertisment