மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் விகார் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் சாவந்த் (45). நிலத்தகராறு மற்றும் சட்ட சிக்கலுக்கு ஆளாகியிருந்த நிலையில், இவர் நேற்று மும்பை உயர் நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அங்குள்ளவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். நீதிமன்ற வளாகத்தில் பணியிலிருந்த காவல் துறையினர், உனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 50-60% காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நிலத்தகராறு மற்றும் சட்டச் சிக்கல்கள் காரணமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, சாவந்த் தனது வழக்கிற்காக வழக்கறிஞர் ஒருவருக்கு பணம் கொடுத்திருந்தார். அந்த பணத்தை வழக்கறிஞர் திருப்பி தராத நிலையில், கடந்த 2021-ல் அந்த வழக்கறிஞருக்கு எதிராக மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சிலில் அளித்த புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரித்த பார் கவுன்சில் பணத்தை திருப்பி தரும்படி உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை பின்பற்றப்படாத காரணத்தினால், இவர் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளை அணுகியதாகவும் கூறப்படுகிறது.
அதனால், கையில் நிறைய ஆவணங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களுடன் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு நேற்று வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து திடீரென மண்ணெண்ணையை தன் மீது ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது.
மேற்கண்ட தகவல், சாவந்த் வைத்திருந்த துண்டு பிரசுரத்தில் இருந்த தகவல்கள் எனவும், இவற்றின் உண்மைத்தன்மையை காவல்துறையின் விசாரணையின் மூலமாக ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சாவந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/q-2025-12-16-18-25-23.jpeg)