கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் வசந்தா. அவருடைய மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். மருமகள் தேன்மொழிக்கு 6 மாதத்தில் ஒரு குழந்தையும், 7 வயதில் ஒரு குழந்தையும் என இரு குழந்தைகள் இருந்தது. வசந்தா, தேன்மொழி, குழந்தைகள் இருவர் என நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். 2016 ஆம் ஆண்டு 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடைப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வசந்தா மற்றும் தேன்மொழி திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்திருப்பது தெரிந்தது. ஆறு மாத குழந்தையை 7 வயது குழந்தை கழுத்தில் வெட்டுப்பட்ட காயத்தோடு தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் நடந்ததைக் கூற, போலீருக்கு தகவல் கொடுக்கப்பட்டது தெரிந்தது.

இந்த சம்பவத்தில் சத்யா, தவுல்த்பேகம், ஜெயக்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். சத்யா என்பவர் அந்த வீட்டில் பணிபுரிந்த போது வீட்டில் அதிக நகை இருப்பதை அறிந்துகொண்டு கொள்ளை அடித்தால் பணக்காரர் ஆகலாம் என பெண் தோழி தவுலத்பேகம் மற்றும் ஆண் நண்பர் ஜெய்குமாருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது. நகைக்காக நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் 2016-ல் தமிழகத்தையே உலுக்கி இருந்தது.

Advertisment

கடந்த ஒன்பது ஆண்டுகளாகவே மூவருமே சிறையில் இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணையானது இன்று நடந்தது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்துள்ளார்.

மூன்று பேருக்கும்  தலா 6 ஆயுள் தண்டனை, 80,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை கேட்டு கல்லு போல் எந்த சலனமும் இல்லாமல் குற்றவாளிகள் இருந்தனர். தீர்ப்பை அடுத்து வேலூர் சிறையில் மூவரையும் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.