விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு, இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியில் பேக்கரி கடை நடத்தி வரும் தொழிலாளரின் 7 வயது மகள், நேற்று இரவு அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாயமாகியுள்ளர். இதனை அறிந்த உறவினர்கள் அங்கம்பக்கத்தில் தேடியபோது அந்த சிறுமி அழுது கொண்டே வந்துள்ளார்.
அப்போது அந்த சிறுமியின் உடைகளில் ரத்தக் கறைகள் இருப்பதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த சிறுமியை மீட்டு குமாரப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த போது அவருக்கு யாரோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து குமாரப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அறிந்த போலீசார் உடனடியாக, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரு இளைஞர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தொடர்பான காட்சிகள் இருந்தது. அதன்படி அந்த இளைஞரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதற்கிடையில், சின்னப்பநாயக்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்துக்குரிய ஒரு நபர் இருப்பதாகக் கூறி அந்த நபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கட்டி வைத்திருப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/08/siru-2026-03-08-18-17-25.jpg)