தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த முருகசெல்வி (வயது 42) என்பவர் பீடி சுற்றும் வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில். முருகசெல்வி தனது மகளுடன் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் இன்று (03.01.2025) காலை சுமார் 07.30 மணியளவில், முருகசெல்வி தனது வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் இறந்த நிலையில் கிடப்பதாகவும், காவல் துறையினருக்கு தகவல் வந்ததது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முருக செல்வியின் உடலை கைப்பற்றி நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஏ.டி.எஸ்.பி. சங்கர் மற்றும் டி.எஸ்.பி. மீனாட்சி நாதன் உள்ளிட்ட அதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்த உறவினர்களிடத்தில் விசாரணை செய்தனர். மார்கழி மாதம் என்பதால் முருகசெல்வி தினமும் கோவிலுக்கு செல்வது வழக்கம் என்றும் அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்ததும், அதிகாலையில் எழுந்து கோவிலுக்கு போவதற்கு முன் சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கைது செய்ய திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணன் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி.சங்கர் தலைமையில் தனிப்படை அமைத்து, துரிதமாக விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலையில் ஈடுபட்ட வடநத்தம்பட்டியை சேர்ந்த சரத் (வயது 24) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட நான்கு சவரன் தாலி சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/ten-murugaselvi-1-2026-01-03-18-39-07.jpg)
கைதான சரத் தினமும் அதிகாலை அந்த வீட்டிற்கு பால் ஊற்றி வருகிறவர். அன்றைய தினம் காலையில் வீட்டின் குளியலறை குழாயிலிருந்து ரத்தம் வடிந்து வருவதாக அந்தப் பகுதியிலுள்ளவர்களிடம் அவரே கூறியுள்ளார். மேலும் சரத் பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Follow Us