மத்தியப்பிரதேச மாநிலத்தில் சந்தோஷ் வர்மா ஐஏஎஸ் எனும் அதிகாரி வேளாண் துறையின் துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் அகில இந்திய SC/ST அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சங்கம் (ஏஜேஏகேஎஸ்) என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேச பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அதிகாரிகள், பணியாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், மாநில சேவையிலிருந்து இந்திய நிர்வாக சேவைக்கு பதவி உயர்வு பெறுவதற்காக போலி ஆவணங்களை தயாரித்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநில பொது நிர்வாகத் துறை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக, அம்மாநில அரசு இவரை வேளாண் துறையின் துணைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இவரை ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரையையும் மத்திய அரசுக்கு அனுப்பவுள்ளதாகவும் கூறியிருக்கிறது. இந்த நிலையில் ஏஜேஏகேஎஸ் மாநாட்டில் வர்மாவின் கருத்துக்களின் தூண்டுதல் காரணமாக ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூக தாக்கத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், வர்மா பேசிய வீடியோ ஒன்று வெளியாகி, அது பெரும் சர்ச்சையாகி வருகிறது. அதில் உயர் நீதிமன்றம் பட்டியல் மற்றும் பழங்குடியின உறுப்பினர்கள் சிவில் நீதிபதிகளாக மாறுவதைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டினார். மேலும் SC மற்றும் ST உறுப்பினர்களை நீதித்துறை போட்டியிலிருந்து விலக்க நீதித்துறை ஆட்சேர்ப்பு செயல்முறை வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் அவர் பேசிய மற்றுமொரு கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் "ஒரு பிராமணர் தனது மகளை எங்கள் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இக்கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக "பிராமண சமாஜ் ஐக்கிய முன்னணி", நாளை (14-12-25) முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து, ஒரு பெரிய அளவிலான போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் "தான் எந்த தவறும் செய்யவில்லை" என வர்மா கூறியிருக்கிறார். அதோடு (ஏஜேஏகேஎஸ்)-க்குள் உள்ள உள் தலைமைத்துவ மோதல்கள் காரணமாக, தான் குறி வைக்கப்படுவதாகவும் கூறியிருக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/sa2-2025-12-13-18-35-49.jpg)