ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கடற்கரையில் ஹணுக்கா எனும் யூத பண்டிகை நேற்று முன்தினம் (14-12-25) கோலகாலமாக கொண்டாடப்பட்டது. இது யூதர்களின் பண்டிகை என்பதால் அங்கு 1000 க்கும் மேற்பட்ட யூதர்கள் உட்பட பொதுமக்களும் திரண்டு பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்குகூடியிருந்தோர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து அந்த இடத்தைவிட்டு ஓடினர். இதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் உலக அளவில் வைரலான நிலையில், இது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.  

Advertisment

இந்த துப்பாக்கி சூடு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சஜித் அக்ரம் (50), நவீத் அக்ரம் (24) ஆகிய இருவர் தான் இந்த சம்பவதில் ஈடுபட்டதாகவும், மேலும் அவர்கள் இருவரும் தந்தை, மகன் என்றும் தெரியவந்தது. அவர்கள் இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக, அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்ததாகவும், சம்பவத்தன்று அங்கிருந்த ஒரு சிறிய பாலத்தின் மேல் நின்றுகொண்டு கூடியிருந்த மக்களை சுட்டதும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர்களுடைய காரில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

Advertisment

இந்த சம்பவம் உலக அளவில் பரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக ஒரு வீடியோவும் வைரலாகி வருகிது. அந்த வீடியோவில், துப்பாக்கி சூடு நடந்த போது அந்த இடத்தில் இருந்த அகமது அல் அகமது (43) என்பவர், துப்பாக்கி சூடு நடத்திய நபரின் பின்புறமாக சென்று அவர் கையில் இருந்த துப்பாக்கியை பறிக்க முயற்சி செய்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் அகமதுவிற்கு இரண்டு இடங்களில் குண்டுகள் பாய்ந்தது.

முகமதுவின் இந்த செயலால் துப்பாக்கி சூட்டின் தாக்கம் வெகுவாக குறைந்தது. இவ்வாறாக தன் உயிரை துச்சமென நினைத்து, கையில் எந்தவித ஆயுதமும் இல்லாமல், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபருடன் சண்டையிட்டு மக்களை காப்பாற்றிய அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த செயலுக்காக அகமதுவை பாராட்டிய ஆஸ்திரேலிய பிரதமர் இவரை "ஆஸ்திரேலியாவின் கதாநாயகன்" என்று புகழாரம் சூட்டினார். மக்களும் இவரின் துணிகாரணமான செயலை பாராட்டி வருகின்றனர்.

Advertisment