வேலூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த நடிகர் திலகத்தின் பேரன் துஷ்யந்த் 'தாத்தாவின் முழு உருவச் சிலையை எனது கையால் திறப்பது பெருமை' என பேசியுள்ளார்.
வேலூர் மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் மன்ற இடத்தில் 2017 ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு பைபர் சிலை நிறுவப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97 வது பிறந்தநாளையொட்டி பழைய சிலையை புணரமைத்து தற்போது முழு உருவ வெண்கல சிலையாக நிறுவியுள்ளனர். இதை சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த் திறந்து வைத்தார். சிலை திறப்புக்கு பிறகு சிவாஜிகணேசன் ரசிகர்கள் சிலை முன்பு தேங்காய் உடைந்து ஆரத்தி எடுத்தனர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு நடிகராக 'பராசக்தி' படம் மூலம் திரைத் துறையில் அறிமுகம் செய்தது வேலூர் என்பது குறிப்பிடத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/a5719-2025-11-10-10-40-55.jpg)
சிலையை திறந்து வைத்தது குறித்து துஷ்யந்த் பேசும்போது, ''நடிகர் திலகத்தை உருவாக்கிய ஊர் வேலூர். நான் பெண் எடுத்த ஊரும் வேலூர் தான். நான் வேலூரின் மாப்பிள்ளை. இந்நிலையில் எனது கையால் நடிகர் திலகத்தின் சிலையை திறந்து வைப்பதை பெருமையாக கருதுகிறேன். இது எனக்கு கிடைத்த பாக்கியம். இப்போதும் மக்கள் அளிக்கும் ஆதரவுக்கு நன்றி. நீங்க இருக்கும் வரை எங்க குடும்பத்துக்கு எந்த கவலையும் இல்லை'' என பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/11/10/a5718-2025-11-10-10-40-34.jpg)