தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தனியார் ஆங்கில தொலைக்காட்சி பேட்டியில் தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பங்கு பெற்றனர். அதேபோல் த.வெ.க. தலைவர் விஜய் தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “அரசியலில் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் எனது ரோல் மாடல்'' என தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் இது குறித்தெல்லாம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு பதிலளித்து பேசிய தமிழிசை, ''ஒரு ஆங்கில தொலைக்காட்சியில் முதலமைச்சராக இருக்கட்டும், துணை முதலமைச்சராக இருக்கட்டும் மிக தவறான கருத்துக்களை அவர்கள் பதிவு செய்கிறார்கள். முதலில் தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும். நமக்குள்ள கவலை என்னவென்றால் தமிழ்நாட்டில் வேலை நிறுத்தம் செய்த பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளம் இந்த மாதம் போடப்படவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே அநீதி இழைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபடாதவர்களுக்கு எல்லாம் சம்பளம் வந்துருச்சு. அப்போது உரிமைக்காக போராடுறவங்களை ஃபேஷன் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் தினம் தினம் அரசாங்கம் ஃபேஷன் ஷோ தான் நடத்திக் கொண்டிருக்கிறது.

Advertisment

இது எல்லாத்தையும் விட்டுட்டு மத்திய அரசு எங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்கிறார்கள். எல்லாத்தையும் விட அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொல்கிறார். திரும்ப காங்கிரஸ் அரசாங்கம் வந்ததுன்னா நீட் தேர்வை நாங்கள் எடுத்துடுவோம் என்கிறார். எத்தனை முறைதான் இந்த நீட்டை வச்சு இப்படி பொய் சொல்லி கொண்டிருப்பீர்கள். முதல்ல இந்த அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டிய அரசாங்கம். ஏனென்றால் முதல் கையெழுத்தை நீட்டுக்கு நாங்க எடுப்போம் என்று சொன்னாங்க செய்யவில்லை. திரும்ப காங்கிரஸ் அரசாங்கம் வரப்போவதில்லை. ஆனால் மறுபடியும் மறுபடியும் இந்த நீட்டை வைத்து மாணவர்களின் தன்னம்பிக்கை குலைக்கிறார்கள்.

என்டிஆர் மாதிரி, எம்ஜிஆர் மாதிரி விஜய்யே தன்னை உருவகப்படுத்தி கொள்ள முடியாது. அவர் இன்னும் மக்களுக்காக சேவை செய்த பிறகுதான் அவரை பற்றி கருத்து என்னால் சொல்ல முடியும்'' என்றார்.

Advertisment