நெல்லை மாநகர் கே.டி.சி நகர் அஷ்டலட்சுமி தெருவில் நேற்று முன்தினம் (27-07-25) கவின் என்ற இளைஞர் ஆணவக் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கவின், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இவர் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்துள்ள நிலையில், தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது, அங்கு வந்த ஒரு இளைஞர் கவினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Advertisment

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என இளைஞர் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து சுஜித்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

a4577
'The girl I loved for 7 years has to be too...' - Kavin's father is furious Photograph: (nellai)
Advertisment

உயிரிழந்த கவினும் சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் தந்தைக்கும் பிடிக்காமல் இருந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினை கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கவின் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்தார்களா? அல்லது இருவருமே காதலித்தார்களா? இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 'என் மகனை வெட்டியவர்கள் அவருடைய மகளையும் வெட்ட வேண்டியது தானே' என ஆவேசமாக கவினின் தந்தை பேசும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், 'பையன் கூட பழகுன அந்த பொண்ணையும் வெட்ட வேண்டியது தானே. ஏழு வருஷமா பழகி இருக்காங்க. அந்த பெண் என் மகனிடம் கற்பை இழந்திருக்க மாட்டாளா? ரெண்டு பேரையும் வெட்ட வேண்டியது தானே? அப்படி செஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன் பரவாயில்லையென்று. அவங்க மகளை மட்டும் வெட்டாமல் என் பையனை மட்டும் வெட்டி விட்டார்கள். அவங்க மகளையும் வெட்டி இருந்தால் நான் பாராட்டிருப்பேன். என் பையன் செத்ததுக்கு ஒரு துளி கண்ணீர் கூட வந்து இருக்காது.

நைட் 12:00 மணிக்கெல்லாம் கதவை தட்டி கிழவிகளைக்  கூடக்  கூட்டிட்டு போறீங்க. ஒரு இன்ஸ்பெக்டர உங்களால் தூக்க முடியல. எஸ்பி போன் செய்தால் ஓடி வந்துருவானே. தலைமறைவு... தலைமுறைவு.. என்று சொல்றீங்க. அவன் எங்க சமூகத்திற்கே விரோதி. திருமாவளவன் வரேன்னு சொல்லிருக்காரு. பாராளுமன்றத்தில் ஒலிக்க வைப்போம். என் பையன் பிரச்சனையை ஐநாவுக்கு கூட கொண்டு போவேன்'' என ஆவேசமாக பேசும் வீடியோ அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.