த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுபொருளாவதும் வழக்கமாகிவிட்டது. 

Advertisment

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் த.வெ.க கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி ஏற்றுதல், கராத்தே போட்டிகளைத் தொடங்கி வைத்தல், மேலும் கடைகள் திறப்பு எனப் பல நிகழ்ச்சிகளில் புதுக்கோட்டை மைய மாவட்டச் செயலாளர் முகமது பர்வேஸ் கலந்து கொள்கிறார் என்று அழைப்பிதழ் போஸ்டர்கள் வெளியானது. அதன்படி இன்று (14.12.2025) நடந்த இந்த நிகழ்ச்சிகளுக்கான பதாகைகளில் தேதியோ நேரமோ குறிப்பிடப்படவில்லை என்ற பேச்சு அடிபட்டது. 

Advertisment

இந்த நிலையில் தான் இந்த நிகழ்ச்சிக்காக அறந்தாங்கி நகரில் நூற்றுக்கணக்கான பதாகைகளை த.வெ.க.வினர் வைத்திருந்தனர். அதில் பல பதாகைகளில் முகமது பர்வேஸ் மாவட்டச் செயலாளர் என்பதையே மறந்து வருங்கால மாவட்டமே! வருக! வருக! என வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஒரு மாவட்டச் செயலாளருக்கு இப்படி வருங்கால மாவட்டமே என வைத்து மீண்டும் நகைப்பிற்குள்ளாகி உள்ளனர். இதுபோன்ற செயல்களைப் பார்த்துத் தான் மற்ற கட்சிகள் தற்குறி என்று பேசுகிறார்கள் என்கின்றனர்.