Advertisment

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று விரிவாக்கம்!

gcc-sanitation-worker-food-mks

கோப்புப்படம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 21வது அமைச்சரவைக் கூட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி (14.08.2025) நடைபெற்றது. அதில், தூய்மைப் பணியாளர்களுக்குக் உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது குடும்பத்தினருக்குச் சுயதொழில் மேற்கொள்ள உதவி செய்யப்படும். மேலும் தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ. 10 லட்சம் காப்பீடு, 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் கட்டித்தரப்படும். 

Advertisment

தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து தூய்மைப்பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை இலவசமாக உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என அந்த  அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

அதன் தொடர்ச்சியாக சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த நவம்பர் மாதம் (15.11.2025) நடைபெற்ற விழாவில் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர்ர் மு.க.ஸ்டாலின தொடங்கி வைத்தார். இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட உணவு வழங்கும் திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (09.02.2026) தொடங்கி வைக்க உள்ளார்.

gcc-sanitation-worker-food-mks-2

அதன்படி அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்க உள்ளார். இந்த விரிவாக்கத்திட்டத்தின் கீழ் 24 மாநகராட்சி, 141 நகராட்சி மற்றும் 480 பேரூராட்சிகளில் பணியாற்றும் சுமார்1.50 லட்சம் பணியாளர்களுக்கு  இன்று முதல் உணவு வழங்கப்பட உள்ளது.

municipality Corporation mk stalin food sanitary workers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe