The first session of the current year begins today with the Governor's address
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (20-01-26) தமிழக சட்டமன்றத்தில் நடைபெறவுள்ளது.
2026ஆம் ஆண்டின் மிதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுடன் இன்று காலை 9:30 மணிக்கு கூடுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல்துறை அணிவிகுப்பு மரியாதை அளிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆளுநர், தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆங்கிலத்தில் சட்டமன்றத்தில் வாசிப்பார். அதனை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார். அத்துடன் முதல் நாள் கூட்டம் நிறைவடையும்.
அதன் பின்னர் நடைபெறும் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது, ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எத்தனை நாட்கள் விவாதிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தொடரில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
Follow Us