புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் கல்லனைக் கால்வாய் மேல் கரையில் எழுந்தருளியுள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி, ஒவ்வொரு வீட்டிலும் விரதமிருந்து மண் சட்டிகள், உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதாணிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்த முளைப்பாரியை தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் நான்கு பக்கமிருந்து வரும் கிராம மக்கள் ஊர்வலமாக தூக்கிச் சென்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/mu3-2026-03-03-17-29-31.jpg)
தொடர்ந்து, மண்ணடித் திடலைச் சுற்று கிராமமே ஒன்று சேர்ந்து கல்லனைக் கரை வழியாக ஊர்வமாகச் சென்று கல்லணைக் கரையோரம் உள்ள பெரிய குளத்தில் உள்ள பனை மரத்தைச் சுற்றி வந்து கும்மியடித்து முளைப்பாரியை பிறகு குளத்தில் விட்டனர். அதை தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகளுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த திருவிழாவின் மற்றொரு முக்கிய திருவிழா மது எடுப்புத் திரவிழா. அடுத்த வாரம் புதன் கிழமை (11-03-26) மாலை கிராமத்தினர் தங்கள் உறவுகளை எல்லாம் அழைத்து கறி விருந்து உபசரிப்பு செய்வார்கள். அதன் பிறகு மாலையில் தங்கள் வீடுகளில் குடங்களில் நெல்மணிகளை நிரப்பி அதில் பச்சை தென்னம்பாளைகளை உடைத்து வைத்து, பூ சுற்றி அலங்காரம் செய்வார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/mul2-2026-03-03-17-29-43.jpg)
இதையடுத்து, குடியிருப்பு வாரியாக ஒன்று சேர்ந்து கும்மியாட்டத்துடன் மண்ணடித் திடலில் ஊரே ஒன்றாய் சேர்ந்து திடலை சுற்றி கல்லனைக் கால்வாயின் கீழ் கரையில் ஊர்வலமாக செல்வார்கள். அதனை தொடர்ந்து, கால்வாய் கரையின் மேல் கரையோரம் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலை சுற்றி வந்து பாளைகளை குளக்கரையில் போட்டுவிட்டு நெல்மணிகளை குவியலாய் கொட்டிய பிறகு அம்மனை வழிபட்டு செல்வர். களைகட்டிய இந்த முளைப்பாரி எடுப்பு திருவிழா கொண்டாட்டத்தில், பல கிராம மக்களும் ஆயிரக்கணக்கில் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/03/03/mu1-2026-03-03-17-28-42.jpg)