The father who took the risk for his son, suffering from Indigo Photograph: (flight)
இந்த மாத தொடக்கத்தில் விமான நிறுவனங்களுக்குச் சர்வதேச சிவில் விமான அமைப்பு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தன்னுடைய விதிகளைச் சமீபத்தில் புதுப்பித்தது. அதில் விமானிகளின் நலன்களையும் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, விமானிகளுக்கான பணி நேரத்தைக் குறைத்தது. அதோடு, அவர்களுக்கான ஓய்வு நேரத்தையும் அதிகரிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக இண்டிகோ விமான நிறுவனத்தில் விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால் பல நாட்களாக இண்டிகோ விமான நிறுவனம் பயணிகள் விமான சேவையை ரத்து செய்தது. இதன் விளைவாக உடல் நலம் சார்ந்து மற்றும் வேலை நிமித்தம் காரணமாக வெளியே செல்ல திட்டமிட்ட பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். ஹரியானா மாநிலம் ரோஸ்தக்கைச் சேர்ந்த ராஜ்நாத் பங்கால் தனது மகனுக்காக, இண்டிகோ விமான நிறுவனத்தில் டிசம்பர் 6 அன்று டெல்லியிலிருந்து இந்தூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய பயணசீட்டு ஒன்றை முன் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் விமான நிலையத்தை வந்தடைந்த பங்கால், இண்டிகோ நிறுவனம் பயணிகளின் விமானத்தை ரத்து செய்ததை கேள்வியுற்று அதிர்ச்சிச்சியடைந்தார். டிசம்பர் 8 அன்று தன் மகனுக்கு தேர்வு இருப்பதால், இந்த கடினமான சூழலில் என்ன செய்வதென்று புரியாத அவர் தானே 800 கிலோமீட்டருக்கு காரை ஓட்டிச் சென்று தன் மகனை பள்ளிக்கு கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார். இண்டிகோ நிறுவனத்தின் பயணிகள் விமான ரத்து காரணமாக ஒவ்வொரு பயணியின் தனிமனித வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow Us