உத்தரப்பிரதேசம் மாநிலம் பாராபங்கியை சேர்ந்தவர் முனிஷ்ரா ராவத் (25). இவர் கடந்த டிசம்பர் 6 அன்று உடல்நலக் கோளாறால் மரணமடைந்தார். இது குறித்து காவல் நிலயத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்புத்தியுள்ளது.
முனிஷ்ரா ராவத் தீராத வயிற்று வலியால் துடித்து வந்துள்ளார். இதன் காரணமாக அவரது கணவர் தெபகதூர் ராவத், கோத்தியில் உள்ள ஸ்ரீ தாமோதர் ஆஸ்தலயா என்ற கிளினிக்கில் அவரது மனைவியை சேர்த்துள்ளார். அங்கு அவரை சோதித்த மருத்துவர், அப்பெண்ணின் கிட்னியில் கல் இருப்பதாகவும், அக்கல்லை அறுவை சிகிச்சை மூலமாக நீக்க வேண்டும் என்பதால் ரூபாய் 25000 செலவாகும் என்றும் கூறியுள்ளார். எனவே முன்பணமாக ரூபாய் 20 ஆயிரத்தை ராவத் காட்டினார். இதனை தொடர்ந்து அப்பெண்ணிற்கு மருத்துவர் அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாளே அப்பெண் இறந்துவிட்டார்.
மேலும் விசாரணையில் அதிர்ச்சி தரும்விதமாக பல தகவல்களும் கிடைத்துள்ளன. அதாவது அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் மது போதையில் இருந்துள்ளார் என்றும் அதோடு மட்டுமல்லாமல் சமூக வளைதளத்தில் (youtube) வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்பெண்ணின் வயிற்றில் பல ஆழமான கீறல்களும் ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்றும் அந்த கிளினிக் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இந்த சம்பவத்தின் மீதான அதிகாரிகளின் நடவடிக்கையினால் அந்த கிளினிக்கு சீல் வைக்கப்பட்டது. போலி மருத்துவர் மது போதையில் வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/dr-2025-12-13-15-11-54.jpeg)