தமிழகத்தில் பொங்கல் திருவிழா தமிழர்களின் அறுவடை திருவிழாவாகவும், விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பாரம்பரியமாகக் கொண்டாடி வருகிறார்கள். அதோடு தமிழக அரசு, அனைத்து அலுவலகங்களிலும் சமத்துவ பொங்கலாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சமத்துவ பொங்கல் விழாவை மாணவர்கள் மேளதாளம் அடித்துக் கொண்டு மற்றும் ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடி விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடினார்கள்.
இதனையொட்டி பள்ளி கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் சமத்துவ பொங்கலிட்டு பொங்கல் திருவிழாவை கொண்டாடுகின்றனர். இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் உள்ள சுரங்கவியல் துறையில் மாணவ மாணவிகள் பொங்கல் விழாவை பாரம்பரிய உடைகளான சேலை மற்றும் வேட்டியுடன் சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு உறியடித்தல், இளவட்டக் கல் தூக்குதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லெமன் அண்ட் ஸ்பூன், பாட்டில் பில்லிங் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சுரங்கவியல் துறையும் இயக்குநர் சரவணன், பொறியியல் புல உற்பத்தியில் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன், சுரங்கவியல் துறை ஆசிரியர்கள் சிவராஜ், பிரேம்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளை வழங்கினர். அதேபோல் பல்கலைக்கழகத்தில் உள்ள விவசாயத்துறை, தமிழ், அறிவியல், மேலாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளில் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பள்ளி, கல்லூரிகளிலும் சமத்துவ பொங்கலிட்டு மேளதாளம் முழங்க ஆடிப்பாடி மாணவர்கள் பொங்கலைப் பாரம்பரிய உடையுடன் கொண்டாடினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/13/au-pongal-2026-01-13-18-15-57.jpg)