தமிழகத்தில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக அமலாக்கத்துறை கடும் நெருக்கடி கொடுக்க தீவிரமாக இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீதான புகார்கள் குறித்தும், அந்த புகார்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பதும் குறித்தும் எப்.ஐ.ஆர். செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட உள்ள மனுவில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மீது உரிய  நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட வேண்டும்” எனத்  தெரிவிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆளும் கட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை தீவிர தீவிரமாக இறங்கியுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

Advertisment

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுகவில் சீனியர்களாக உள்ள எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்கத்துறை செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக திமுகவின் சீனியர் தலைவர்களைக் குறி வைத்துத்தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.