Advertisment

இரண்டாவது முறையாக மூடப்பட்டது கிழக்கிந்திய கம்பெனி

1013

The East India Company was closed for the second time Photograph: (world)

இந்திய வரலாற்றில் என்றும் அழியாத இடம் பிடித்தது ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த வணிகர்களால் கூட்டு முதலீட்டு நிறுவனமாக உருவாக்கப்பட்டது தான் கிழக்கிந்திய கம்பெனி. 1600 ஆம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட அந்த கம்பெனி காலப்போக்கில் பெருமளவிலான வளர்ச்சியைக் கண்டது. இந்த வளர்ச்சி ஆங்கிலேயர்கள் இந்தியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிவகுத்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் ஆட்சியைக் கைப்பற்றினர்.  

Advertisment

பிற்காலத்தில், 1858 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பிரிட்டன் அரசுக்கு மாற்றப்பட்டது. பின்னாளில், விக்டோரியா மகாராணியின் ஆட்சிக் காலத்தில் 1874 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்தை 135 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் தொழிலதிபர் சஞ்சீவ் மேத்தா என்பவர் கடந்த 2010 ஆண்டு இந்த நிறுவனத்தை கைப்பற்றினர்.

Advertisment

இந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் உரிமத்தைப் பெற்ற இவர், 2010 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை மீண்டும் தொடங்கினார். தொடர்ந்து நடைபெற்று வந்த நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடி  காரணமாக இரண்டாவது முறையாக மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு 10 கோடிக்கும் மேல் கடன் இருப்பதால், தற்போது  திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Business England
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe