திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இன்று திமுக நடத்தும் 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' எனும் தலைப்பில் திமுக மகளிர் மேற்கு மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது.

Advertisment

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா, கே.என்.நேரு, செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில் எம்.பி கனிமொழி உரையாற்றினார், "மகளிரணியில் உள்ள நாங்கள் முதலமைச்சருக்கு அரசியலமைப்பு புத்தகத்தை கொடுத்துள்ளோம், ஏனென்றால் இந்த நாட்டை பாதுக்காக்க வேண்டிய கடமை உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்பனதால் தான். நாட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் நீங்கள் (ஸ்டாலின்) தான் முதலில் குரல் கொடுக்கிறீர்கள், நீங்கள் குரல் கொடுத்தப் பிறகு தான் நாட்டில் உள்ள மற்றவர்கள் குரல் கொடுக்கிறார்கள். பாஜக பெண்களுக்கு பாதுகாப்பது அளிப்பது இல்லை ஆனால் தமிழ்நாட்டில் கோவையில் ஒரு பெண்ணுக்கு குற்றம் நடந்தவுடன், முப்பது நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நம் முதல்வர் உத்தரவிட்டார். 

Advertisment

நாட்டில் வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வந்த நூறு நாள் வேலை திட்டத்தை பாஜக ஒழிக்கப் பார்க்கிறது. இதனால் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் தங்கள் பொருளாதாரத்தை இழந்துவரும் நிலையை ஏற்படுத்துகிறது பாஜக. வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு என்பது பெண்களுக்கான ஆட்சியை, பெண்களின் எதிர்காலத்தை பெருமைப்படுத்தக்கூடிய ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லக்கூடிய மாநாடு தான் இந்த மாநாடு, பெண்களுக்கான ஆட்சியை தரக்கூடிய உங்களின் பின்னால் நாங்கள் நிற்கிறோம் என்று சொல்லக்கூடிய மாநாடு தான் இந்த மாநாடு" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி பாஜக வின் மோசமான செயல்பாடுகள் குறித்து விமர்சித்துப் பேசினார். தொடர்ந்து குறை செய்வதன் மூலமாகவே ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நினைக்கும் கட்சிகள், மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு போதும் செவிசாய்ப்பதில்லை என்றும் பேசினார்.

Advertisment