சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர்கள் ஆர்.சம்பந்தமூர்த்தி, பி. செல்வகுமார், மாநில பொதுச் செயலாளர்கள் ஏ. ராஜசேகர், ரகோத்தம்மன், வேல்முருகன், பால்மணி, பொருளாளர் செந்தில்குமார் உள்ளிட்ட தமிழக அளவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேரவை வளர்ச்சி குறித்தும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேசினார்கள். தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். இதுவரை 3745 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. கோவில் நிலங்கள் 7,598 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. தி.மு.க.வில் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அதிக அளவில் உள்ளனர். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா கூறினார். கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருந்து விடக் கூடாது என்பதற்காக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கூறியுள்ளார்.
எனவே தி.மு.க.வில் புதிதாக கல்வியாளர்கள் அணி மற்றும் மாற்றுத்திறனாளிகள் அணி உள்ளமை போன்று புதிதாக பகுத்தறிவுவாளர்கள் அணியை புதிதாக திமுக தலைவரும் முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/28/thei-2025-11-28-21-31-47.jpg)