தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி, அந்தந்த மாநிலக் கட்சிகளும், தேசியக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
அதன்படி, மாநிலங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்ட னர். அதாவது எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக அளித்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியோரைக் கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (19.12.2025) வெளியிடப்பட்டது. இதற்கான பட்டியலை சம்பந்தப்ப்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கினர். அந்த வகையில் சென்னையில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் மொத்தமாக 81,515 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் 3.24 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் 3,31,787 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் 3,24,894 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடலூரில் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அரியலூரில் 24,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 2,51,162 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 7,01,871 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினத்தில் 57,338 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டையில் 1,45,157 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 84,329 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரையில் 3,80,474 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/karur-draft-voter-list-collector-2025-12-19-16-27-51.jpg)