The despicable act of cowards - the outraged EPS! Photograph: (admk)
எம்.ஜி.ஆரின் சிலையை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து அதிமுகவினர் கொந்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில், எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மதுரை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி, வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பெரும் கண்டனத்துக்குரியது.
அவரின் புகழையும் அவரது கொள்கைகளையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத கோழைகள் செய்த இழிசெயலாகவே இதை கருதுகிறேன். சிலையை சேதப்படுத்துவதன் மூலம் பொன்மனச் செம்மல் செய்த சாதனைகளையும் அவரது புகழையும், அவர் தனது திட்டங்கள் மூலமாக மக்களிடையே ஏற்படுத்திய புரட்சியையும் சிறிதளவுகூட மக்கள் மனதில் இருந்து குறைக்கவோ மாற்றவோ முடியாது.
இச்செயலை செய்து, பொதுஅமைதியை சீர்குலைக்க நினைக்கும் சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்துகிறேன்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.