தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோந்தா (Montha) என்று பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று (24.10.2025) காலை 05:30 மணிக்குக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது தொடர்ந்து நேற்று மாலை 5:30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதனையடுத்து இன்று (25.10.2025) காலை மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு மேற்கு, தென்மேற்கே சுமார் 420 கி.மீ.லும், ஆந்திரப் பிரதேச விசாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்கே 990 கி.மீ.க்கும் சென்னைக்குக் கிழக்கே, தென்கிழக்கே 990 கி.மீ.லும், ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவுக்குத் தென் கிழக்கே 1000 கி.மீ.க்கும், ஒடிசாவின் கோபால்பூருக்குத் தென்கிழக்கே 1040 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருக்கின்றது.
மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து 26ஆம் தேதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27ஆம் தேதி காலை (திங்கட்கிழமை) தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மோந்தா புயலாக வலுப்பெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/cyclone-model-sea-2025-10-25-10-50-05.jpg)