திருவள்ளூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கொடூரத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில்  கடந்த சனிக்கிழமை 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் சிறுமியை தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்த நிலையில் சிறுமியை அவருடைய பாட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

தொடர்ந்து சிறுமி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது நபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியை தூக்கிச் சென்றது தொடர்பான பகீர் காட்சி வெளியாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கூடுதலாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து எட்டு நாட்கள் ஆகியும் பாலியல் கொடூரத்தை நிகழ்த்திய நபரை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Advertisment

a4477
The criminal who has not been caught even after eight days - a photo has been released Photograph: (police)

Advertisment

சம்பவம் நடந்த பகுதியில் பல மணிநேரம் அந்த நபர் நடமாடியதற்கான ஆதாரங்களும் இருந்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்னதாக இரண்டு பெண்களிடம் அவன் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான இளம்பெண் ஒருவர் கணவருக்காக காத்திருந்தபோது அந்த பெண்ணிடமும் அந்த நபர் ஆபாச சைகை காட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தி பேசியதாகவும் சொல்லப்படுகிறது.  

இந்த கொடூரச் செயலில் ஈடுபடப்பட நபரின் புகைப்படம் இதுவரை தெளிவில்லாமல் இருந்த நிலையில்  ஓரளவிற்கு தெளிவான புகைப்படத்தை தற்பொழுது காவல்துறையில் வெளியிட்டுள்ளனர்.