நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு சமூக அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன. இந்த குற்றங்களைத் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்களை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து, வன்கொடுமை செய்ததாக மகேஷ் என்பவர் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம், மகேஷ்க்கு 25 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியிருந்தது. இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இளைஞர் மகேஷ் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவினை பிறப்பித்தனர்.
தற்காலத்தில், நடைபெற்று வரும் குற்றங்களில் பெண்கள் மட்டும் அல்லாமல் சிறுவர் சிறுமிகளும் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தடுப்பதற்குப் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் வழிமுறைகளை அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்க மாநிலத்தில் இரவில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் ‘பிங்க் பூத்கள்’ அமைக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/maduraihighcourt-2026-03-07-20-14-41.jpg)