The commotion caused by the ruckus caused by the youth who came to pay their respects to Theeran Chinnamalai Photograph: (salem)
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220 வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த இளைஞர்கள் சிலர் வாகனங்கள் மீது ஏறிக்கொண்டு ஆபத்தான முறையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அலப்பறை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் அரசியல் தலைவர்கள் அங்கு மரியாதை செலுத்த வருவார்கள் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் போலீசார் குவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த இளைஞர்கள் சிலர் கார் மீது ஏறிக்கொண்டு அலப்பறை செய்ததால் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் இடையூறும் ஏற்பட்டது.