கோவையில் 'நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்' என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிலத்தையும் அதில் உள்ள வளங்களையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினர்.

Advertisment

தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசுகையில், '' உச்சத்தை விட்டுவிட்டு, வருமானத்தை விட்டுவிட்டு வா என்று யார் சொன்னது. உன் வீட்டு வாட்ச்மேன் கூடநிற்கலையேடா.. சேவை செய்ய வந்தால் சேவை செய். நான் அடைக்கலம் தேடி வரவில்லை படைக்கலம் தேடி வந்துள்ளேன் என்கிறார். யாரும் வா என்று கூப்பிடவில்லையே... அஜித்தும், ரஜினிகாந்த்தும் தங்களுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை.

எம்ஜிஆர் நடிகர் என்று மட்டும் நினைக்காதீங்க ஒன்றரை மணிநேரம் ஆனாலும் எழுதி வைக்காமல் பேசுவார். விஜயகாந்த் மனசிலிருந்து மக்கள் மொழியில் பேசுவார். ஆனால் ஸ்டாலின் கூட சின்ன சீட்டை வைத்துப் பேசுவார். என் தம்பி விஜய்யும் எடப்பாடி பழனிசாமியும் முழு சீட்டை பார்த்துப் பேசுகிறார்கள். பார்த்து எழுதும் மாணவன், படிச்சு எழுதும் மாணவன் எந்த மாணவன் நல்ல மாணவன்னு நீங்கதான் முடிவு பண்ணவேண்டும்'' என்றார்.