தமிழ்நாட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் வைப் வித் எம்கேஎஸ் (VibeWithMKS) என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது எபிசோட் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இசைக் கலைஞர்ளை அழைத்து அவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடியிருக்கிறார்.

Advertisment

இதில் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகர்கள் ஆண்டனி தாஸ், கானா முத்து, பிரியங்கா, இசையமைப்பாளர் தென்மா உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலினுடன் கலந்துரையாடியிருக்கின்றனர்.

Advertisment

இந்த நிகழ்ச்சியின் போது, பாடகர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து பாடல் பாடியது தற்போது வைரலாகி வருகிறது. பாடகி ஒருவர் தங்களுடன் சேர்ந்து பாடல் பாடுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்றுக்கொண்ட முதல்வர், ‘தெய்வத்தின் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற ‘நீ இல்லாத உலகத்திலே’ என்ற பாடலை பாடகர்களுடன் சேர்ந்து பாடினார். அதனை தொடர்ந்து பாடகர்களுடன் அவர் உரையாடினார்.

முன்னதாக முதல் எபிசோடில், உலக அளவிலும், தேசிய அளவிலும் சாதனைகளைப் படைத்தத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment