Advertisment

'முதல்வர் செய்வது வரலாற்றுப் பிழை'-தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு தமிழிசை பேட்டி

a5583

'The Chief Minister is making a historic mistake' - Tamilisai interview after Diwali celebrations Photograph: (bjp)

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர் ''அனைவருக்கும் உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். நாங்கள் எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

Advertisment

எந்த மத விழாக்களாக இருந்தாலும் எல்லாருக்கும் ஒற்றுமையாக தான் ஒன்றாகத்தான் வாழ்த்து சொல்வோம். ஆனால் இந்த அளவிற்கு மகிழ்ச்சியாக கொண்டாடக்கூடிய ஒரு விழாவிற்கு தமிழக முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை என்பது வரலாற்றுப் பிழை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல உதயநிதி சொல்லும் பொழுது நம்பிக்கை உள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று சொல்கிறார். மற்றமதங்களில் உள்ளவர்களுக்கு இப்படி நீங்கள் சொல்வதில்லைஆகவே போலி மதச்சா.ர்பின்மையை தமிழக அரசு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Advertisment

தீபாவளி கொண்டாடும் மக்கள் அனைவரும் இதைப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் நிச்சயமாக 2006 இந்துக்களை ஒரு மாற்றான் தாய் மனப்பான்மையோடு நடத்துவதை நிச்சயமாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 15 லட்சம் பேர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நான் பாஜகவின் தலைவராக இருந்த காலத்திலிருந்து சிவகாசியில் பட்டாசு தொழில் செய்பவர்களுக்காக தனியாக ஒரு மருத்துவமனை நிறுவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம். இன்று வரை பட்டாசு விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்கான தனியாக தீக்காயங்களுக்காக ஒரு மருத்துவமனை மிக மிக உயர் ரக சிகிச்சையோடு அமைக்கப்பட வேண்டும்'' என்றார்.

m.k.stalin diwali b.j.p tamilisai soundarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe