வங்கக்கடலில் உருவான டிட்வா புயலால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Advertisment

குறிப்பாக டிட்வா புயல் காரணமாக சென்னையில் கடந்த 1ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாள் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை (06-12-25) சனிக்கிழமை பள்ளி திறக்கப்பட்டவுள்ளதாக சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தொடர் மழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு 0212.2025 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 06.12.2025 அன்று (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.