பொது இடத்தில் உள்ள மரங்களை அனுமதியின்று வெட்டினால்  அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாவது, மாநகராட்சியின் பொது இடத்தில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும், மரக்கிளைகளை வெட்டினாலோ, மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகை பொருத்தினாலோ ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும். அதே போல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்தினாலும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

Advertisment