Advertisment

“மத்திய அரசு உறுதியாக உள்ளது” - வெளியுறவுத் துறை அமைச்சர் உரை!

eam-jaishankar-lok-sabha-speech

மேற்கு ஆசியாவின் நிலவரம் குறித்து நடாளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு இடையே வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “பிப்ரவரி 20ஆம் தேதி மத்திய அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததோடு, அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பதற்றத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு தொடர்ந்து நம்பிக்கை கொண்டுள்ளோம். 

Advertisment

பிரதமர் மோடி வளர்ந்து வரும் முன்னேற்றங்களை நெருக்கமாகக் கண்காணித்து வருகிறார். பயனுள்ள பதிலளிப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொடர் மோதல் இந்தியாவுக்குக் கூடுதல் கவலை அளிக்கிறது. நாம் அண்டை பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், மேற்கு ஆசியா நிலையாக இருக்க வேண்டும் என்பதில் நமக்கு நேரடி அக்கறை உள்ளது. வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர் மற்றும் பணிபுரிகின்றனர். ஈரானிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இந்தப் பிராந்தியம் நமது எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானது. எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கும் பல முக்கிய நாடுகளை உள்ளடக்கியது. 

Advertisment

இதன் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் கடுமையான இடையூறுகளும், அங்கு நிலவும் ஸ்திரமற்ற சூழலும் தீவிரமான பிரச்சனைகளாகும். மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலை கணிசமாக மோசமடைந்துள்ளது. இந்த மோதல் மற்ற நாடுகளுக்கும் பரவி அழிவை ஏற்படுத்தி வருகிறது. அங்கு இயல்பு வாழ்க்கையும் செயல்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நாம் இரண்டு இந்திய மாலுமிகளை (வணிகக் கப்பல் போக்குவரத்து) இழந்துள்ளோம். ஒருவர் மாயமாகி உள்ளார். தெஹ்ரானில் இருந்த பல இந்திய மாணவர்களை வெளியில் உள்ள இடங்களுக்கு இடமாற்றம் செய்ய இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. ஈரானில் வணிக நிமித்தமாக இருந்த இந்தியர்கள், ஆர்மீனியா வழியாக இந்தியா திரும்புவதற்கு வசதிகள் செய்து தரப்பட்டன. 

eam-jaishankar-rajya-sabha

தெஹ்ரானில் உள்ள நமது தூதரகம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது மற்றும் மிகுந்த விழிப்புடன் உள்ளது. இந்த நேரத்தில் இந்தியச் சமூகத்திற்கு ஆதரவளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நேற்று (08.03.2026) வரை, சுமார் 67 ஆயிரம் இந்தியர்கள் சர்வதேச எல்லைகளைக் கடந்து தாயகம் திரும்பியுள்ளனர். மேற்கு ஆசியாவிலிருந்து நமது மக்களைத் திரும்ப அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் ஈரானின் தலைமை மட்டத்திலான தொடர்புகள் கடினமாக உள்ளன. ஈரானிய போர்க்கப்பலான 'லாவன்' கொச்சி துறைமுகத்தில் நிறுத்த அனுமதித்த இந்தியாவிற்கு, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார். 

அதே போன்று  மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் முழக்கங்களுக்கு இடையே அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டவாறும் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டனர்.  இருப்பினும். மேற்கு ஆசிய மோதல் குறித்துப் பேசிய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “இந்த மோதல் நமது எரிசக்தி பாதுகாப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, எரிசக்தி சந்தைகளின் இருப்பு, செலவு மற்றும் அபாயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில் அரசு உறுதியாக உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, இந்திய நுகர்வோரின் நலன்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார். 

budget session Parliament Rajya Sabha lok sabha ministry of external affairs Jaishankar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe