The boy who went to pick up a sparrow's nest; sad incident in namakkal Photograph: (namakkal)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்த குருவிக் கூட்டை எடுக்கச் சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்துள்ள இருகூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சஞ்சய் 9 வயது. தன்னுடைய வீட்டிற்கு அருகே டிரான்ஸ்பார்மர் ஒன்றில் குருவிக்கூடு இருப்பதைப் பார்த்த சஞ்சய் அதை எடுப்பதற்காக மேலே ஏறியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது மின்சாரம் தாக்கி சிறுவன் வீசப்பட்டான். உடனடியாக மீட்கப்பட்ட வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.a